ஜியுச்சுவன் செயற்கைக்கோள் ஏவு தளத்தில் அக்டோபர் 30ஆம் நாள் முற்பகல் நடைபெற்ற ஷென்சோ-21 விண்கலத்தை ஏவுதல் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட தகவல்களின்படி, அக்டோபர் 31ஆம் நாள் இரவு நேரம் 23:44 மணிக்கு, ஷென்சோ-21 விண்கலமானது விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஷென்சோ-21 விண்கலத்தில் இவ்விண்கலத்தின் ஓட்டுநர் சாங்லூ, மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலப் பயணத்தின் பொறியியலாளர் வூஃபி, சுமை நிபுணர் சாங்ஹோசாங் ஆகிய 3 வீரர்கள் பயணிக்க உள்ளனர்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                







 
                                     
                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                