சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 26ஆம் நாளிரவு, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், அந்நாட்டின் தலைமையமைச்சர் அன்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மலேசியாவுடன் உயர் நிலை பரிமாற்றத்தை வலுப்படுத்தி, நெடுநோக்குத் தொடர்பை ஆழமாக்கி, சீன-மலேசிய பொது சமூகத்திற்கான அரசியல் நம்பிக்கை அடிப்படையை உறுதி செய்ய வேண்டும் என்று லீச்சியாங் தெரிவித்தார்.
சீனா, ஆசியான் நாடுகள், வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் நாடுகள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். பிரதேசம் மற்றும் பல தரப்பு வாதத்தை உண்மையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனா, மலேசியாவின் நல்ல அண்டை நாடாகவும் கூட்டாளியுறவாகவும் மலேசியா விளங்குகிறது என்று அன்வர் தெரிவித்தார்.
