சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அக்டோபர் 30ம் நாள் தென்கொரியாவின் ஃபுசன் நகரில் சந்திப்பு நடத்தினர்.
பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினை குறித்து ஷிச்சின்பிங் கூறுகையில், இரு நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரதிநிதி குழுக்கள், முக்கிய பிரச்சினைகள் குறித்து கருத்துகளை ஆழமாகப் பரிமாறிக் கொண்டு, பிரச்சினை தீர்வுக்கான ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளன. இனி வரும் விரிவான பணிகளை இரு தரப்பினரும் கூடிய விரைவில் செயல்படுத்த வேண்டும். இரு தரப்புக்கும் உலகின் பொருளாதாரத்துக்கும் உறுதி தன்மையைக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
டிரம்ப் இரு நாட்டின் ஒத்துழைப்புகள் குறித்து கூறுகையில், சீனா, அமெரிக்காவின் மிக பெரிய கூட்டாளி. இரு நாடுகள் கை கோர்த்துக் கொண்டால், பல முக்கிய பணிகளை நிறைவேற்றி, எதிர்காலத்தில் மேலதிக ஒத்துழைப்பு சாதனைகளைப் பெறும். பொருளாதாரம், எரியாற்றல் முதலிய துறைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மனிதத் துறைத் தொடர்பை முன்னெடுக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டில் சீனப் பயணத்துக்கு எதிர்பார்ப்பு தெரிவித்த டிரம்ப், ஷிச்சின்பிங்கை அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
