கோடைக்கால தவோஸ் மன்றத்தின் 14ஆவது கூட்டம் 29ஆம் நாள் டியன்ஜின் நகரில் நிறைவடைந்தது. இதில் கலந்துகொண்ட பல்வேறு தரப்புகளும், சீன பொருளாதார வளர்ச்சி மீது நம்பிக்கை காட்டி, சீன பொருளாதாரம் உலகிற்கு புதிய வாய்ப்புகளை தருவதை எதிர்பார்க்கின்றன.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 30ஆம் நாள் கூறுகையில்,
சீன நவீனமயமாக்கத்தின் சாதனைகள், வெளிநாட்டு திறப்பு போக்கில் எட்டப்பட்டன. இவை வெளிநாட்டு திறப்பு கொள்கையின் மூலம், புதிய எதிர்காலத்தை உருவாக்கும். சீனா, நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு, சுதந்திரமான திறப்பான மற்றும் நிலையான பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையைப் பேணிக்காத்து, உலக பொருளாதாரத்துக்கு ஊந்து சக்தி வழங்கும் என்றார்.