ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் தனது வாழ்க்கையில் முதல் முறையாக உலகளாவிய செல்வந்தர் தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளார்.
இதன் மூலம் உலகின் பணக்காரர் என இதுநாள் வரை இருந்த எலான் மஸ்க்கை முந்தி பட்டியலில் முதலிடத்தில் இடம் பிடித்துள்ளார்.
ஆரக்கிள் கார்ப் நிறுவனம் அபாரமான காலாண்டு முடிவுகளை வெளியிட்டதை அடுத்து, எலிசனின் நிகர மதிப்பு ஒரே நாளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு $101 பில்லியன் உயர்ந்தது.
இது அதன் பங்குகளில் சாதனை அளவை எட்டியது.
நியூயார்க்கில் காலை 10:10 மணி நிலவரப்படி, எலிசனின் சொத்து மதிப்பு $393 பில்லியனாக இருந்தது, இது மஸ்கின் $385 பில்லியனை விட அதிகமாகும் என்று ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டு எண் தெரிவிக்கிறது.
உலக பணக்கார பட்டியலில் எலான் மஸ்க்கை முந்திய ஆரக்கிளின் லாரி எலிசன்
