கோலாலம்பூரில் நடைபெற்ற சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தையில் அடைந்த முடிவுகளை சீன வணிக அமைச்சகம் அக்டோபர் 30ஆம் நாள் வெளியிட்டது.
முதலாவதாக, சீனப் பொருட்களுக்கு(ஹாங்காங் மற்றும் மக்கெள சிறப்பு நிர்வாகப பிரதேசங்களிலிருந்து வரும் பொருட்களை உள்ளடங்கியவை)விதிக்கப்பட்ட 10சதவீதம் கூறப்படும்” ஃபெண்டானில் வரியை” அமெரிக்க தரப்பு ரத்து செய்யும். சீனப் பொருட்களுக்கு கூடுதல் 24சதவீத பரஸ்பர வரி விதிப்பதை அமெரிக்கா ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைக்கும். மேற்கூறிய அமெரிக்க வரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா தொடர்புடைய மாற்றங்களைச் செய்யும் என்று இவ்வமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். இரு தரப்பும் சில சுங்க வரி விலக்கு நடவடிக்கைகளைத் தொடர்ந்து நீடிக்க ஒப்புக் கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இரண்டாவதாக, ஏற்றுமதி கட்டுபாடுகள் குறித்து அமெரிக்கா கடந்த செப்டம்பர் 29ஆம் நாள் அறிமுகப்படுத்திய புதிய விதி அமலுக்கு வருவதை அமெரிக்கா ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைக்கும். அதற்கு பதிலளிக்கும் விதமாக, அக்டோபர் 9ஆம் நாள் வெளியிடப்பட்ட ஏற்றுமதி கட்டுபாடுகளை ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைக்க சீனா தீர்மாணித்தது.
மூன்றாவதாக, சீனாவின் கடல்சார், சரக்கு போக்குவரத்து மற்றும் கப்பல் கட்டும் தொழில்களை இலக்காகக் கொண்ட 301 விசாரணையின் கீழ் உள்ள நடவடிக்கைகளை செயல்படுத்துவதை அமெரிக்கா ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைக்கும். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா மீதான எதிர் நடவடிக்கைகளையும் ஒரு ஆண்டுக்கு சீனா நிறுத்தி வைக்கும்.
தவிரவும், ஃபெண்டானில் போதைப்பொருட்கள் தடுப்புக்கான ஒத்துழைப்பு, வேளாண்மை வர்த்தகத்தின் விரிவாக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இரு தரப்பும் ஒருமித்த கருத்துக்கள் எட்டியுள்ளன. மாட்ரிடில் நடைபெற்ற சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தையில் பெறப்பட்ட சாதனைகளை இரு தரப்பும் மேலும் உறுதி செய்தன. முதலீடு உள்ளிட்ட துறைகளில் அமெரிக்கா நேர்மறையான வாக்குறுதியை வழங்கியுள்ளது. சீனா அமெரிக்காவுடன் உரிய முறையில் டிக்டாக் பிரச்சினையைத் தீர்க்கும் என்று செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
