நடப்பாண்டில் 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

Estimated read time 0 min read

மேட்டூர் அணை நடப்பாண்டில் ஏழாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 14420 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணை நீர் இருப்பு 93. 470 டிஎம்சியாக உள்ளது

மேட்டூர் அணையிலிருந்து தற்போது காவிரி டெல்டா பாசனத்திற்காக 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் 3 மணி அளவில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 20000 கனடியாக அதிகரிக்கப்பட உள்ளது. மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி அணையின் வரலாற்றில் 44 வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன் பிறகு ஜூலை மாதம் 5 ஆம் தேதி இரண்டாவது முறையாக 120 அடியை எட்டியது. அதன் பிறகு மூன்றாவது முறையாக ஜூலை 20 ஆம் தேதி 120 எட்டியது அதன் பிறகு நான்காவது முறையாக ஜூலை 25 ஆம் தேதி 120 அடி எட்டியது அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி ஐந்தாவது முறையாக 120 எட்டி உள்ளது அதன் பிறகு செப்டம்பர் 1ஆம் தேதி ஆறாவது முறையாக 120 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது அக்டோபர் 20ஆம் தேதி ஏழாவது முறையாக 120 அடி எட்டி உள்ளது. மேட்டூர் அணை ஒரே ஆண்டில் ஏழு முறை 120 அடி எட்டியதால் விவசாயம் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author