ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற 8ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி (CIIE) நவம்பர் 10ஆம் நாள் நிறைவடைந்தது.
இதில் ஒரு வருட பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கான மொத்தம் 84.49கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள தற்காலிக ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 4.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடப்பு பொருட்காட்சியில், தொழில் நிறுவனங்களின் காட்சியரங்கு நிலப்பரப்பு 3இலட்சத்து 67ஆயிரம் சதுர மீட்டரைத் தாண்டியது. இதில் 138 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 4108 நிறுவனங்கள் பங்கேற்றன.
கண்காட்சி நிலப்பரப்பு மற்றும் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை வரலாற்றில் மிக அதிக அளவில் பதிவானது. உலகின் 500 முன்னணி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையின் முன்னணி நிறுவனங்களின் எண்ணிக்கை 290ஆகும், 180 நிறுவனங்கள் தொடந்து 8 ஆண்டுகளாக சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் பங்கெடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
