ஈரான் மற்றும் இலங்கையின் பல்வேறு துறைகளிலான இருதரப்பு உறவை முன்னேற்றும் விருப்பத்தை ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமிர்-அப்துல்லாஹியனும் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியும் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
கொழும்புவில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தினர் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது இலங்கைப் பயணம் இலங்கையுடன் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் தொடர்பை மேலும் விரிவாக்குவதற்கான அடிப்படையை வழங்கும் என்று நம்புவதாக அமிர்-அப்துல்லாஹியன் தெரிவித்தார். தவிரவும், பாலஸ்தீன மக்களுக்கும் காசா பிரதேசத்துக்கான இலங்கை ஆதரவு நிலைப்பாட்டு அவர் பாராட்டு தெரிவித்தார்.
அதேபோல், ஈரானின் பொருளாதார மற்றும் தொழில்துறைத் திறனைப் பாராட்டிய அலி சப்ரி, ஈரான் பொருளாதாரத் திட்டங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தயாராக உள்ளது என்று குறிப்பிட்டார்.