அமெரிக்க மத்திய அரசின் மொத்த கடன் தொகை 36 லட்சம் கோடி டாலரைத் தாண்டி, வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சகம் 24ஆம் நாள் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மாபெரும் நிதிப் பற்றாக்குறை, மத்திய அரசின் கடன் விரைவாக உயர்ந்ததற்கான முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜுலை வரை, அமெரிக்க மத்திய அரசின் கடன் 34 லட்சம் கோடியில் இருந்து 35 லட்சம் கோடி டாலருக்கு உயர்ந்துள்ளது. அதற்குப் பிறகு 3 திங்கள்களில் மட்டும், ஒரு லட்சம் கோடி டாலர் கடன் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.