4,662 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வுகள் நடத்தி ஆட்களை தேர்வு செய்து நிரப்பி வருகிறது.
அந்தவகையில் வி.ஏ.ஓ மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 4,662 பணியிடங்களுக்கு சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வெழுதியிருந்தனர்.
இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது பதிவு எண்களை உள்ளீடு செய்து முடிவுகளை பார்க்கலாம்.
