தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ!

Estimated read time 0 min read

சென்னை : தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் சென்று கொண்டிருக்கிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்தை நெருங்கி வந்த நிலையில், பொதுமக்களும் நகை பிரியர்களும் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர். ஆனால் இன்று (நவம்பர் 27, 2025) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது நுகர்வோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று மட்டும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.11,800க்கும், ஒரு சவரன் ரூ.640 உயர்ந்து ரூ.94,400க்கும் விற்பனையானது. இதனால் இன்று மேலும் விலை உயருமா என்ற அச்சம் நிலவியது.ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக இன்று தங்கம் விலை குறைவு கண்டுள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.11,770க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.94,160க்கும் விற்பனையாகிறது. இதேபோல் 18 காரட் ஆபரணத் தங்கமும் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.9,815க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.78,520க்கும் விற்பனையாகிறது.தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை மட்டும் உயர்வைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.4 உயர்ந்து ரூ.180க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000க்கும் விற்பனையாகிறது.

திருமண சீசன், பண்டிகைக் காலம் என்பதால் வெள்ளி நகை வாங்குவோருக்கும் இந்த உயர்வு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.தற்போதைய நிலவரப்படி, தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தங்கம் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் விரைவில் முடிவெடுப்பது நல்லது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். தங்கம் விலையின் அடுத்தக்கட்ட நகர்வு சர்வதேச சந்தை, டாலர் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author