கன்னியாகுமரி மாவட்டம், முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
ஐயப்ப பக்தர்களின் வருகையால் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்ட தொடங்கின.
முக்கடல் சங்கமத்தில் அதிகாலை சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள், செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும், கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளூவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மற்றும் அதனை இணைக்கும் கண்ணாடி நடைபாலம் ஆகியவற்றையும் கண்டு களித்தனர். மேலும், ஐயப்ப பக்தர்கள் கடலில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர்.
