தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புயல் காரணமாக மழை வெளுத்து வாங்குகிறது. மழையின் காரணமாக காய்கறிகள் மற்றும் பூக்களின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது மல்லிப்பூ விலை உயர்ந்துள்ளது.
அதன்படி தென்காசி சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லி பூ 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதாலும் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததாலும் இந்த விலை உயர்வு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
