அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:-
தவெகவினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக ஏற்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்வார் என்பது விஜய்க்கு தெரியாதா?. அதனால் பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கு விஜய் செல்ல மாட்டார். கூட்டணிக்கு விஜய்யை இழுக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி சிறுபிள்ளைத்தனமாக செயல்பட்டு வருகிறார்.
வரும் தேர்தலில் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். விஜய் 2-வது இடத்திற்கு வரும் வாய்ப்பும் இருக்கிறது. நீங்கள் கணிக்க முடியாத அளவுக்கு வரும் தேர்தலில் புதிய கூட்டணிகள் உருவாகும். எனக்கு தெரிந்தவரை திமுக கூட்டணிக்கும், தவெக தலைமையில் அமையும் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி இருக்கும் என்பது என் கணிப்பு
இவ்வாறு அவர் கூறினார்.
