பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிற தங்கத்தின் விலையானது 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தொடர் ஏற்றம் கண்டு, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் ஒரே ஆண்டில் 75% உயர்வை சந்தித்திருக்கிறது. அதேபோல், வெள்ளி விலையும் வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த ஆண்டில் மட்டும் 148% அதிகரித்தது.
பின்னர், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே போர் காரணமாக தங்கம் விலை 12% சரிவை சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் ஏறத் தொடங்கியிருக்கிறது. இருப்பினும், விலையுயர்ந்த உலோகமாக பார்க்கப்படுகிற தங்கத்திற்கு வரும்காலங்களிலும் சந்தை சூழல் சாதகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.28) சவரனுக்கு ரூ.1040 குறைந்துள்ளது. நேற்று (ஏப்.,27) ஒரு சவரன் ரூ.113,840க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1040 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,12,800க்கு விற்பனையாகிறது.
அதேபோல், இன்று கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.265க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2,65,000க்கு விற்கப்படுகிறது.
சங்க இலக்கியங்களைப் பெருமளவு பதிப்பித்து வெளியிட்ட பெருமை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைச் சேரும். இக்கழகத்தின் ஆட்சியாளராக இருந்த வ.சுப்பையாபிள்ளை அவர்கள் தேர்ந்த உரையாசிரியர்களைக் [மேலும்…]
பிரபல பட்டிமன்ற பேச்சாளர், நடுவர் சாலமன் பாப்பையா (90) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். சன் தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராக வலம் வந்த அவர் 13,000 [மேலும்…]
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையால் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. வார விடுமுறை மற்றும் விநாயகர் [மேலும்…]
சென்னை : “அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களே, இனிய குழந்தைகளே” என்று பட்டிமன்ற மேடைகளில் தனது கணீர்க்குரலால் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நெஞ்சங்களைக் [மேலும்…]
தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், [மேலும்…]
இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நுவரெலியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். [மேலும்…]
சென்னை மாநகரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வந்த சுமார் 70 ரவுடிகளை, ஒரே இரவில் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் [மேலும்…]
இந்தியா – ஜப்பான் நாடுகளின் 75 வருட உறவைக் கொண்டாடும் வகையில், வரும் செப்டம்பர் 22 அன்று ஜப்பானில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா [மேலும்…]