மதுரையில் விழாக்கோலம்: மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று  

Estimated read time 1 min read

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.
இதையொட்டி மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழாவின் 10-வது நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் மங்கல நாண் சூட்டும் நிகழ்வு நடைபெறுகிறது.
இன்று காலை 8.35 மணி முதல் 8.59 மணி வரை திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
சுமார் 10 டன் எடையுள்ள, ரூ.30 லட்சம் மதிப்பிலான பல வண்ணப்பூக்களால் திருமண மேடை பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தங்கை மீனாட்சியைத் தாரை வார்த்துக் கொடுக்க திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளக்கனிவாய் பெருமாளும், தெய்வானையுடன் முருகப்பெருமானும் நேற்று இரவே மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளியுள்ளனர்.

You May Also Like

More From Author