டித்வா புயலின் காரணமாக ஏற்பட்ட கடும் பாதிப்புகளைத் தொடர்ந்து, இலங்கையின் அதிபர் அனுரா குமார திசநாயக்க, நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார்.
புயல் நாட்டை விட்டு வெளியேறினாலும், அதன் கோரத் தாண்டவத்தால் இதுவரை 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அவசர நிலையை அறிவிக்கக் கோரியதைத் தொடர்ந்து, சனிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அரசிதழில் இந்த அவசர நிலை அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த அறிவிப்பின் மூலம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம், ராணுவம், காவல்துறை, சுகாதாரப் பிரிவு மற்றும் சிவில் நிர்வாகப் பிரிவுகளை விரைவாகப் பயன்படுத்தி, தற்போதையச் சூழலைச் சமாளிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
120க்கும் மேற்பட்டோர் பலி; இலங்கையில் அவசர நிலை பிரகடனம்
