சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமம் 9ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவில் இருப்புப்பாதை மூலம் பயணம் மேற்கொண்டோரின் மொத்த எண்ணிக்கை 368கோடியைத் தாண்டியது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 1கோடியைத்த் தாண்டியது.
மேலும், மின்சார உற்பத்திக்கான நிலக்கரி, தானியம், உரம் உள்ளிட்ட முக்கிய பொருட்களின் போக்குவரத்தைச் சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமம் முழு மூச்சுடன் செயல்படுத்தியுள்ளது.
சரக்குப் போக்குவரத்துத் துறையில், இருப்புப்பாதை மூலம் 391கோடி டன் எடையுள்ள சரக்குகள் ஏற்றிச்செல்லப்பட்டன. வரலாற்றில் முன்பு கண்டிராத புதிய பதிவை இது உருவாக்கியுள்ளது.
2023ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனா நாடளவில் இருப்புப்பாதையின் மொத்த நீளம் 1லட்சத்து 59ஆயிரம் கிலோமீட்டராகும். அவற்றில் அதிவிரைவு தொடர் வண்டிக்கு 45ஆயிரம் கிலோமீட்டர் நீளம் பாதையும் அடங்கும்.