அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மூன்று உறுப்பினர்கள், இந்தியாவின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரியை முடிவுக்குக் கொண்டுவர வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தனர்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த இந்த நடவடிக்கைகளை, சட்டவிரோதமானது மற்றும் தீங்கு விளைவிப்பது என்று அவர்கள் வர்ணித்துள்ளனர்.
இது அமெரிக்கத் தொழிலாளர்கள், நுகர்வோர் மற்றும் இருதரப்பு உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரதிநிதிகள் டெபோரா ராஸ், மார்க் வீசி மற்றும் இந்திய அமெரிக்க எம்பி ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையிலான இந்தத் தீர்மானம், ஆகஸ்ட் 27, 2025 அன்று இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் 25% சுங்க வரியைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறது.
