சீனா ரயில்வே குழுமம் வெளியிட்ட தகவலின்படி, CR450 அதிவிரைவு தொடர் வண்டியின் முன்மாதிரி டிசம்பர் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டது.
CR450 அதிவிரைவு தொடர் வண்டியின் புத்தாக்கத் திட்டப்பணி, சீனாவின் ரயில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்க நிலையையும், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப சுயவலிமையையும் பெரிதும் உயர்த்தி, சீனாவின் அதிவிரைவு தொடர் வண்டி தொழில் நுட்பம் உலக முன்னணியில் உள்ள மேம்பாட்டு நிலையை மேலும் வலுப்படுத்தும்.
CR450 அதிவிரைவு தொடர் வண்டியின் சோதனை வேகம், மணிக்கு 450 கிலோமீட்டராகும். இதன் இயங்கும் வேகம் மணிக்கு 400 கிலோமீட்டர் ஆகும். உலகளவில் மிக வேகமாக இயங்கும் அதிவிரைவு தொடர் வண்டி இதுவாகும். இது பயணிகளுக்கு மேலும் வசதியான சேவையை அளிப்பதோடு, தனிநபரின் தேவைக்குப் பொருந்திய பல்வகையான சேவையை வழங்க முடியும்.
7 ஆண்டுகளின் தொடர் முயற்சிகளின் மூலம், CR450 அதிவிரைவு தொடர் வண்டியின் முன்மாதிரி வெளியிடப்பட்டது, சீனாவின் அதிவிரைவு தொடர் வண்டி மணிக்கு 400 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வணிக நோக்கிற்கு இயங்கும் தொழில் நுட்பத்தின் முதலாவது ஆராய்ச்சி சாதனையைப் பெற்றுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.