உதகையில் 2வது நாளாகக் கடும் உறைபனி காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர்வாட்டி வதைக்கும் நிலையில், தற்போது உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருகிறது.
உதகையில் 2வது நாளாக உறைபனி அதிகரித்துள்ளதால் பச்சைக் கம்பளத்தில் முத்துக்கள் கொட்டியது போல் புல்வெளி மைதானங்கள், வாகனங்கள் மீது பனித்துளிகள் படர்ந்து காணப்படுகின்றன.
மலைத்தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் மீது வெள்ளைக்கம்பளம் போற்றியது போல் உறைபனி படர்ந்துள்ளதால் பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
உறைபனி காரணமாகத் தோட்டத் தொழிலாளர்கள், பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளான நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
