சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ‘ஃபெயில்’ என்ற நடைமுறை அமலுக்கு வந்தது.
கட்டாய தேர்ச்சி முறை மாற்றப்பட்டு, தேசிய கல்விக் கொள்கையின்படி விதிகள் திருத்தப்பட்டது. அதன்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ஆம் வகுப்பில் இனி 30% குறைவாக மதிப்பெண் எடுத்தால் பெயில் என அறிவிக்கப்படும் நடைமுறை அமலுக்கு வருகிறது.
8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறையை வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ் மாற்றுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் வரும் ஆண்டு முதல் அமல் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9ம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டதால் இந்த முறை அடுத்த ஆண்டில் இருந்துதான் முழுமையாக நடைமுறைக்கு வரும் என ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-இன் படி இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இதற்காக பெற்றோரிடமும் ஒப்புதல் கடிதத்தை பெற்று வருகின்றன சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகத்தினர்.