பெய்ஜிங்கில் நடைபெற்று வருகின்ற 2025ம் ஆண்டின் இரு கூட்டத் தொடர், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
துருக்கியின் பேட்ரியாடிக் கட்சி தலைவர் பெரின்செக் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில், சீன பொருளாதார வளர்ச்சி திட்டத்துக்கான நியாயம், உலக நிர்வாகத்துக்கு அதன் பங்கு ஆகியவற்றைப் பாராட்டினார்.
அவர் கூறுகையில், பயன் தரும் பொருளாதாரக் கொள்கை மற்றும் பலதரப்புவாத ஒத்துழைப்பு மூலம், சீனா, உலக பொருளாதாரத்துக்கு வலுவான உந்து சக்தியை ஊட்டியுள்ளது.
சீனாவின் நிலையான வளர்ச்சி, உலக அமைதி மற்றும் நிதானத்துக்கு முக்கிய உத்தரவாதம் அளிக்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தான், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி வெற்றிகரமாக நடைபெற்றது. உலகக் கவனத்தை ஈர்க்கும் சாதனைகளையும் சீனா படைத்துள்ளது என்று தெரிவித்தார்.