நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் வரும் டிசம்பர் 27, 2025 அன்று நடைபெற உள்ளது.
இக்கூட்டம் சென்னை, திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) அரங்கில் காலை 10 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையை தவறாமல் உடன் எடுத்து வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
