ஜப்பானிய தரப்பு அதன் தவறான கூற்றுகளைத் திரும்பப் பெற வேண்டுமென ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி ஃபுஸூவுங் உள்ளூர் நேரப்படி டிசம்பர் 15ஆம் நாள் அமைதிக்காக தலைமைத்துவம் காட்டுவதென்ற ஐ.நா பாதுகாப்பவையின் விவாதக் கூட்டத்தில் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
அவர் மேலும் கூறுகையில், அமைதிக்காகத் தலைமைத்துவத்தைக் காட்டும் பொருட்டு, முதலில் அமைதியைப் பேணிக்காத்து நியாயத்தில் ஊன்றி நிற்க வேண்டும் என்றார். தைவான் பிரச்சினையில் ஜப்பான் ராணுவ முறையில் ஈடுபடக் கூடும் என்று ஜப்பானிய தலைமை அமைச்சர் சனே தக்காச்சி அச்சுறுத்தினார். இது சீன உள்விவகாரத்தில் கடுமையாகத் தலையீடு செய்யும் செயலாகும். 2ஆம் உலகப் போரில் தோல்வியுற்ற நாடான ஜப்பான், சீனா மற்றும் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை இது வெளிப்படையாக மீறியுள்ளது. ஆசிய அமைதி மற்றும் உலக அமைதிக்குக் கடும் அபாயத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
