சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். சின்ஜியாங்குக்கான நிர்வாகம் தொடர்பான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிகரமான அனுபவம் பற்றிய வெள்ளையறிக்கையை சீன அரசு 19ஆம் நாள் வெளியிட்டது.
கடந்த 70 ஆண்டுகளில் சின்ஜியாங்கின் வளர்ச்சி குறிப்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிகரமான நிர்வாக அனுபவங்களை இந்வெள்ளையறிக்கை தொகுத்து, எதிர்காலத்தில் சின்ஜியாங்கின் வளர்ச்சியைத் திட்டமிட்டுள்ளது. இந்த வெள்ளையறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.
சின்ஜியாங்குக்காக, நிதானம் மிக முக்கிய விவகாரமாகும். வளர்ச்சி, நிதானத்தின் உத்தரவாதமாகும். கல்வி, மருத்துவம், வீட்டு வசதி ஆகியவற்றைப் பெற்ற சின்ஜியாங் மக்கள், இனிமையாக வாழ்கின்றனர். சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள முக்கிய திறப்பு வாயிலாக சின்ஜியாங் மாறியுள்ளது. சீனாவின் திறப்பு பணி மற்றும் பட்டு பாதை பொருளாதார மண்டலத்தின் மைய பகுதியின் கட்டுமானம் முன்னேற்றுவதோடு, ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பாலமாகவும் சின்ஜியாங் மாறியுள்ளது. நிதானமான சமூகம், செழுமையான பொருளாதாரம், தூய்மையான இயற்கைச் சூழல், இனிமையாக வாழ்கின்ற மக்கள் ஆகியவற்றைக் கொண்ட சின்ஜியாங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகத்தின் சாதனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.