தேயிலை தொழில் சங்கிலியின் அளவு 1.5 டிரில்லியன் யுவானை எட்ட சீனா திட்டம்

Estimated read time 0 min read

2026 முதல் 2030 வரையிலான தேயிலை தொழில் தர உயர்வுக்கான வழிகாட்டலை சீன தொழில் மற்றும் தகவல் தொழில் அமைச்சகம் உள்பட 5 துறைகள் 14ஆம் நாள் வெளியிட்டன.

2030ஆம் ஆண்டுக்குள் முழு தேயிலை தொழில் சங்கிலியின் அளவு 1.5 லட்சம் கோடி யுவானை எட்டி, குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட தேயிலை பதனீட்டுத் தொழிலின் இயக்க வருவாய் 20 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டி, செழுமையான, அறிவார்ந்த பசுமையான மற்றும் முதல் தர தேயிலை தொழில் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று இந்த ஆவணத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேயிலை தொழில், சீனாவில் உயிராற்றல் மற்றும் போட்டியாற்றல் மிக்க பாரம்பரிய தொழிலாகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்த தொழிலாகவும் திகழ்கிறது.

2025ஆம் ஆண்டில் சீனாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட தேயிலை பதனீட்டு தொழில் நிறுவனங்களின் இயக்க வருவாய் 12 ஆயிரம் கோடி யுவானையும், முழு தேயிலை சங்கிலியின் அளவு 1 லட்சம் கோடி யுவானையும் தாண்டியுள்ளது.

இத்தொழில் ஆண்டுக்கு வழங்கும் வேலைவாய்ப்புகள் 6 கோடிக்கும் மேலாகும். செயற்கைக் கோள் உதவியுடன் தேயிலை பயிரிடுதல், நுண்ணறிவு தொழிற்சாலை, புதிய சீன பாணி தேனீர் தயாரிப்பு, தேயிலை தொழிலுடன் இணைந்த சுற்றுலா போன்ற புதிய தொழில் வடிவங்கள் மற்றும் மாதிரிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author