“பெற்றோர்களே உஷார்!.. 90’s காலத்து ஆளா இருப்பாரு போல!”.. யூடியூப் வியூக்ஸுக்காக அப்பாவின் கிரெடிட் கார்டை எடுத்த 9 வயது சிறுவன்… டென்ஷனில் உறைந்த தந்தை..!! 

Estimated read time 1 min read

அமெரிக்காவில் யூடியூப் தளத்தில் தான் பதிவிட்ட சிறு காணொளியின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை  உயர்த்தும் ஆசையில், 9 வயது சிறுவன் மைக் செய்த விபரீத காரியம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வீடியோவை அதிக மக்கள் பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்தத் திட்டமிட்ட சிறுவன், இதற்காகத் தனது தந்தையின் கிரெடிட் கார்டை ரகசியமாகப் பயன்படுத்தியுள்ளான். இதன் மூலம் குறுகிய காலத்திற்குள் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சிறுவன் மைக்கின் தந்தை டேவிட் என்பவருக்குச் சொந்தமான அலுவலகப் பயன்பாட்டுக்கான கிரெடிட் கார்டு தகவல்கள் அவரது கூகுள் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்ததே இந்த மிகப்பெரிய சிக்கலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்தச் சிறுவன், தனது வீடியோக்களுக்கு விளம்பரம் செய்வதற்காகக் சுமார் 1.13 கோடி ரூபாய் இந்திய மதிப்பை அள்ளி இறைத்துள்ளான். தன் கணக்கில் இருந்து இவ்வளவு பெரிய தொகை குறைந்த நேரத்தில் காணாமல் போனதைக் கண்டு அதிர்ந்துபோன தந்தை, பின்னர் நடந்தவற்றைக் கண்டறிந்து விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது இந்தச் சம்பவம் குறித்த விபரங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி உலக அளவில் வைரலாகி வருகின்றன. “Gen Z அப்பாவா இருப்பாரோ போல” என்று நெட்டிசன்கள் பலரும் கிண்டலாகவும் ஆச்சரியமாகவும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியும் சிறுவர்களின் அணுகுமுறையும் எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளதால், இது இணையத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக வலம் வருகிறது

 

You May Also Like

More From Author