2024ஆம் ஆண்டின் ஜி20 உச்சி மாநாடு நியாயமான உலகத்தையும் தொடரவல்ல பூகோளத்தையும் உருவாக்குதல் என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.
சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கின் கருத்தில், ஜி20 குழுமத்தைச் சேர்ந்த உறுப்பு நாடுகள் உலக மற்றும் பிரதேசத்தின் பெரிய நாடுகளாக உள்ளன. அவை தனது பொறுப்பை ஏற்று, மனித குலத்துக்கு நலன் தர முயற்சிக்க வேண்டும் என்று குறிப்பிட்டப்பட்டார்.
சீன ஊடக குழுமத்தின் CGTN அண்மையில் நடத்திய கருத்து கணிப்பு ஆய்வின் பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் உலகப் பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றுவிப்பதில் சீனா ஆற்றிய பங்களிப்புக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
உலக மேலாண்மையில், தெற்குலக நாடுகள் கொண்டுள்ள பிரதிநிதித்தன்மை மற்றும் கருத்து வெளிப்பாட்டுரிமையின் உயர்வுக்கு சீனா மாபெரும் பங்காற்றியுள்ளது என்று பதிலளித்தவர்களில் 92.8 விழுக்காட்டினர் கருத்தைத் தெரிவித்தனர்.
இந்த ஆய்வு வெளியிடப்பட்ட 24 மணி நேரத்துக்குள் சுமார் 7500 பேர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.