தென்கொரியாவில் 20 ஆண்டுகளுக்கு முன் விற்பனை செய்யப்பட்ட எல்ஜி நிறுவனத்தின் குளிர்சாதனப் பெட்டிகளில் பொருத்தப்பட்டிருந்த சின்னங்கள், சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டது என்ற தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சியோலில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில், வாடிக்கையாளர் ஒருவர் கொண்டு வந்த பழைய ஏசியின் முத்திரையை உருக்கிப் பார்த்தபோது, அது 24 கேரட் சுத்த தங்கம் என்பது உறுதி செய்யப்பட்டது.
கடந்த 2005ஆம் ஆண்டு எல்ஜி நிறுவனம் தனது விற்பனை சாதனையை முன்னிட்டு, முதல் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக இந்தத் தங்க முத்திரையுடன் கூடிய குளிர்சாதனப் பெட்டிகளை வழங்கியுள்ளது.
இதன் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் நாற்பதாயிரம் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்பதால், பழைய எல்ஜி ஏசிகளை வைத்திருப்பவர்கள் தங்களது வீட்டிலும் தங்கம் இருக்கிறதா என ஆர்வத்துடன் தேடி வருகின்றனர்.
