சீன அரசவையின் செய்தி அலுவலகம் செப்டம்பர் 12ம் நாள், உயர் தரத்துடன் 14வது ஐந்தாண்டு காலத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்த செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது.
இதில் இக்காலக்கட்டத்தில் சர்வதேச நிதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, ஆழமாக விரிவாக்கப்பட்டுள்ளது என்று நிதித் துறை அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் விளக்கினார்.
சர்வதேச நிதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, நாடுகளின் தூதாண்மையின் ஒரு முக்கிய பகுதியாகும்.
நிதித் துறை அமைச்சகம், 26 பலதரப்பு மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தை முறைமைக்குப் பொறுப்பேற்பதோடு, 18 சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளும் ஜன்னல் மேடையாகவும் திகழ்கிறது.
அதே வேளையில், உயர் தர திறப்பு பணியின் அளவை விரிவாக்கப் பாடுபட்ட நிதித் துறை அமைச்சகம், சுங்க வரி மொத்த விகிதத்தை 7.3 விழுக்காடாகக் குறைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.