நேபாளத்தைச் சேர்ந்த கமி ரீதா என்ற 54 வயது மலையேற்ற வீரர், உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் 29ஆவது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார்.
இன்று காலை 7.30 மணிக்கு அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். தனது வாழ்நாளில் எவரெஸ்ட் சிகரத்தில் இத்தனை முறைதான் ஏற வேண்டும் என்று இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை என்றும், தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டே இருப்பேன் என்றும் கமி ரீதா தெரிவித்துள்ளார்.
கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரத்து 848 மீட்டர் உயரத்தில் எவரெஸ்ட் சிகரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.