சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 12ம் நாள், கிரிபாடி நாடு சுதந்திரம் பெற்ற 46வது ஆண்டு நிறைவு குறித்து, அந்நாட்டு அரசுத் தலைவர் மாமௌவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், 2019ம் ஆண்டில் சீன-கிரிபாடி தூதாண்மையுறவு மீட்டெடுக்கப்பட்ட பின், சீராக வளர்ந்து வந்த இரு நாட்டுறவுடன், செழுமையான சாதனைகள் பல படைக்கப்பட்டுள்ளன. சீன-கிரிபாடி உறவில் முக்கியத்துவம் அளிக்கிறேன். அரசுத் தலைவர் மாமௌவுடன், அரசியல் நம்பிக்கையை ஆழமாக்கி, பயன் தரும் ஒத்துழைப்பை விரிவாக்கி, மக்களின் பரிமாற்றங்களை முன்னேற்றி, இரு நாட்டுறவை புதிய கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு முயற்சி செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.