சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 17ஆம் நாள் வியாழக்கிழமை கம்போடிய மன்னர் நாரோடம் சிஹாமோனியுடன் சந்திப்பு நடத்தினர்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீனா கம்போடிய அரசு குடும்பத்துடனான நட்புறவைப் பேணி மதித்து, பல ஆண்டுகளாக இரு நாட்டு நட்பார்ந்த இலட்சியத்துக்கு முக்கிய பங்காற்றி வருகின்ற கம்போடிய அரசு குடும்பத்துக்கு பெரும் பாராட்டு தெரிவிக்கின்றது என்று கூறினார்.
மேலும், நிலைப்பை நிலைநாட்டுதல், வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், தனது நாட்டு நிலைமைக்கு ஏற்கும் வளர்ச்சி பாதையில் நடத்தல் ஆகியவற்றில் செயல்பாட்டு வரும் கம்போடியாவுக்கு சீனா உறுதியாக ஆதரவு அளிக்கின்றது.
அதே வேளையில், சீனாவின் நவீனமயமாக்க கட்டுமானம், கம்போடியா உள்ளிட்ட அருகிலுள்ள நாடுகளுக்கு அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதை நம்புகின்றோம் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
மன்னர் சிஹாமோனி கூறுகையில், கம்போடிய-சீன நட்புறவு, இரு நாடுகளின் முந்தைய தலைவர்களால் கூட்டாக உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இரு தரப்புகளின் கூட்டு முயற்சிகளுடன், பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்புகள் நாளுக்கு நாள் நெருங்கி வருகின்றன. பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானமும் தொடர்ந்து ஆழமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.
மேலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஷிச்சின்பிங்கின் பயணம், இரு நாடுகளுக்கிடையேயான உறுதியான நட்புறவை ஆழமாக்கவும், கம்போடிய-சீன உறவை புதிய நிலைக்கு கொண்டு வரவும் உதவும் என்றும், ஆசியான் உள்ளிட்ட பல தரப்பு சார் ஒருங்கிணைப்பு அமைப்புமுறைகளின் கீழ் சீனாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த கம்போடியா விரும்புகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
தவிரவும், கம்போடிய மன்னராட்சியின் தேசிய சுதந்திரத்தின் கிராண்ட் நெக்லஸ் எனும் விருதை ஷிச்சின்பிங்கிற்கு சிஹாமோனி கெளரவித்தார்.