2023ஆம் ஆண்டு ஆசிய வளர்ச்சி முன்னாய்வு பற்றிய துணை அறிக்கையை ஆசிய வளர்ச்சி வங்கி ஜுலை 19ஆம் நாள் வெளியிட்டது. ஆசிய-பசிபிக் பிரதேசத்திலுள்ள வளரும் பொருளாதாரச் சமூகங்களின் மீது இவ்வங்கி எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையைக் கொண்டுள்ளதோடு, சீனப் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடாக இருக்குமென்ற தனது கணிப்பை மாற்றவில்லை.
சீனாவின் உள்நாட்டு நுகர்வு மற்றும் முதலீட்டு நடவடிக்கை, பிரதேசப் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும். ஆனால் முக்கிய வளர்ந்த நாடுகளின் நாணயக் கொள்கையின் காரணமாக, இப்பிரதேசத்திலுள்ள சில நாடுகளின் தொழில்துறை உற்பத்தி பாதிக்கப்படும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகளவில் எரிபொருள் மற்றும் உணவு விலை குறைந்து வருவதுடன், பிரதேசத்தின் பணவீக்கமும் தொடர்ந்து குறைந்து நோய்தொற்றுக்கு முந்தைய நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இவ்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.