விசு கேள்வி : உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்?
நாகேஷ் பதில் : நகைச்சுவை நடிகரா? நடிகர்கள்னு கேளுங்க.
கேள்வி : ஏன் நிறைய பேர் உங்களுக்கு பிடிக்குமா? யாரெல்லாம் பிடிக்கும்?
நாகேஷ் பதில் : எல்லா அரசியல்வாதிகளுமே நடிகர்கள் தான்…
கேள்வி : உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகை?
நாகேஷ் பதில்: நகைச்சுவை நடிகை என் பேத்தி. அவ பேசும்போதுதான் என்னால சிரிக்கவே முடியுது.
கேள்வி : உங்களுக்கு பிடிச்ச வில்லன் யார்?
நாகேஷ் பதில்: நாட்டுல ஊடுருவி இருக்கும் மதவெறியும் வன்முறை கலாச்சாரமும்.
கேள்வி : உங்களுக்கு பிடிச்ச நண்பர் யார்?
நாகேஷ் பதில்: நான் இதுவரை சந்திக்காதவங்கதான் எனக்கு பிடிச்ச நண்பர்கள். ஏன்னா இதுவரைக்கும் சந்திக்கவே இல்லையே…
