சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் 4ஆம் நாள், வெனிசுலா அரசுத் தலைவர் மதுரோ மற்றும் மனைவியை அமெரிக்கா கட்டாயக் கட்டுப்படுத்துவது குறித்து செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்தார்.
ஜனவரி 3ஆம் நாளில், அமெரிக்கா இராணுவ படையினரை அனுப்பி, வெனிசுலா அரசுத் தலைவர் மதுரோ மற்றும் மனைவியை கட்டாயமாகக் கட்டுப்படுத்தி, அந்நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளது. பல நாடுகளின் அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்து சீனாவின் கருத்து என்ன என்று செய்தியாளர் ஏழுப்பிட கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,
இச்சம்பவத்தில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அமெரிக்காவின் இச்செயல், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுக்கான அடிப்படை கோட்பாடுகளுக்குப் புறம்பானது. தவிரவும். ஐ.நா சாசனத்தின் கோட்பாடு மற்றும் கொள்கையை மீறியது என்று தெரிவித்தார். வெனிசுலா அரசுத் தலைவர் மதுரோ மற்றும் மனைவியின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உத்தரவாதம் செய்ய வேண்டும். அவர்களை அமெரிக்கா உடனடியாக விடுவிக்க வேண்டும். வெனிசுலா ஆட்சியை கவிழ்க்கும் சூழ்ச்சியை நிறுத்தி, பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினையை தீர்க்குமாறும் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது என்றார்.
