சீனாவின் குவாங்டோங் மாநிலத்தின் மேசோ நகரில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலையில் மே முதல் நாள் அதிகாலை 2:10மணியளவில், லச்சரிவு சம்பவம் ஏற்பட்டது.
2ஆம் நாள் காலை 6 மணிக்கு வரை, இச்சம்பவத்தால் 36பேர் உயிரிழந்தனர், 30பேர் காயமுற்றனர்.
பேரழிவுக்குப் பின், இச்சம்பவத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ள சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், முழு முயற்சியுடன் மீட்புதவிப் பணி, காயமுற்றவர்களுக்கு சிகிச்சை, பின்விளைவுகளைக் கையாளும் பணி உள்ளிட்டவற்றை விரைவாக மேற்கொள்ளுமாறு உத்தவிட்டார். மேலும், சீர்குலைந்த சாலையைச் சீரமைக்கும் பணியை விரைவுப்படுத்தவும், வெகுவிரைவில் இயல்பான போக்குவரத்து சேவை மீட்கவும் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தவிரவும், பல்வேறு நிலையிலான அரசாங்கங்கள் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்தவும், பேரிடர் தடுப்பு திட்ட செயல்பாடுகளை முழுமைப்படுத்தவும், முக்கிய பகுதிகளில் ஏற்படும் அபாயங்களை காலதாமதமின்றி கண்டறியவும் வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.