சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜூன் 14ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் ஹங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஆசிய பாராலிம்பிக் போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஹங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 23ஆம் நாள் துவங்கவுள்ளது. ஆசியாவிலுள்ள 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அனைத்து ஒலிம்பிக் கமிட்டிகளும் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன.
ஹங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வரலாற்றில் முன்பில்லா அளவுக்கு வீரர்களை அனுப்பும் என்று பல நாடுகள் தெரிவித்தன குறிப்பிடத்தக்கது.