அமெரிக்காவின் துணை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜே.டி.வேன்ஸின் சின்சினாட்டி நகரில் உள்ள இல்லத்தில், இன்று (ஜனவரி 5) அதிகாலை ஒரு மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஜனவரி 5 அதிகாலை சுமார் 12:15 மணியளவில், துணை அதிபர் வேன்ஸின் ஓஹியோ மாகாண இல்லத்தில் ஒரு நபர் அத்துமீறி நுழைந்தது தெரியவந்தது.
அந்த நபர் வீட்டின் ஜன்னல்களைத் தாக்கி உடைத்துள்ளார். மேலும், அந்தப் பகுதியை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சில முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கத் துணை அதிபர் இல்லம் மீது தாக்குதல்; ஜன்னல்கள் உடைப்பு
