உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மாக் மேளா திருவிழாவில், காசிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரோ மற்றும் அதிதி என்ற இரு சகோதரிகள் ஆலங்குச்சிகளை விற்று ஒரே நாளில் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில், கடின உழைப்பும் சுயசார்பும் இருந்தால் எந்தத் தொழிலிலும் சாதிக்கலாம் என்பதை இந்தச் சகோதரிகள் நிரூபித்துள்ளனர்.
मेरा उत्तर प्रदेश बम बम कर रहा है….
पहले कुंभ मेले मे लोगो ने छोटे छोटे कम लागत वाले व्यापार कर के कमाया
अब इस बार पुनः गाजीपुर के दो महिलाये दातुन बेचकर 10000 रुपये तक का काम कर चुकी है…
पहले की सरकार मे बस अव्यवस्था थी अराजकता थी कोई सोच भी नहीं सकता था महिलाये घर से… pic.twitter.com/f0jZuXU4DS
— Saurabh Marwadi (@SaurabhMarwadi) January 5, 2026
கங்கை நதியில் புனித நீராட வரும் பக்தர்கள் அதிகாலையிலேயே ஆலங்குச்சிகளை விரும்பி வாங்குவதால், நாள் முழுவதும் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். எவ்வித நவீன வசதிகளும் இன்றி பாரம்பரியமான சிறு தொழிலைச் சிறப்பாகச் செய்து வரும் இந்த இளம்பெண்களின் தன்னம்பிக்கை, இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
