பொங்கல் பரிசு விநியோகம் இன்று தொடக்கம்! டோக்கன் இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு  

Estimated read time 0 min read

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை போற்றும் வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அதே வேளையில், டோக்கன் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு பெறுவது குறித்துக் கூட்டுறவுத் துறை முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற விழாவில், ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கத்துடன், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கி விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
இதனுடன் வேட்டி மற்றும் சேலையும் வழங்கப்பட உள்ளது.

You May Also Like

More From Author