2025இல் 30000 கோடி யுவானைத் தாண்டிய ஷிச்சாங்கின் மொத்த உற்பத்தி மதிப்பு

Estimated read time 0 min read

ஷிச்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் புள்ளிவிவர பணியகம் ஜனவரி 22ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் ஷிச்சாங்கின் மொத்த உற்பத்தி மதிப்பு 30000 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.

1965ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஷிச்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 2015ஆம் ஆண்டில் 10,000 கோடி யுவானைத் தாண்டியது. 50 ஆண்டுகள் முயற்சியுடன் இச்சாதனை பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், 2021ஆம் ஆண்டில் இப்பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 20,000 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. தற்போது 30,000 கோடி யுவானை தாண்டிய சாதனை பெற்றதற்கு 4 ஆண்டுகள் மட்டுமே தேவைப்பட்டுள்ளது.

14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் ஷிச்சாங்கிலுள்ள பெரிய திட்டப்பணிகள் சீராக முன்னேற்றப்பட்டுள்ளன. சூரிய ஆற்றல், காற்றாற்றல் உள்ளிட்ட புதிய எரிசக்தி மின் உற்பத்தித் திறன் மொத்தத்தில் 50 சதவீதத்தை வகித்துள்ளது. மேலும், பீடபூமியில் இணக்கமான மற்றும் அழகான 1,000 கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author