குய்சோ மாநிலத்தில் அண்மையில் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், டொங் இன மக்கள் வாழும் ஒரு கிராமத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கிராமத்தின் வாயிலில், பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்ட கிராமவாசிகள், 2500 ஆண்டுகளுக்கு மேலாக கடந்து வந்த (The Grand Song) டொங் இன கிராண்ட் பாடல் என அழைக்கப்படும் நாட்டுப்புற பாடல்களை பாடி ஷிச்சின்பிங்கை வரவேற்றனர்.
டொங் இன கிராண்ட் பாடல் கலையின் தோற்றம், தனித்துவம், பாட்டு முறை உள்ளிட்ட அறிமுகங்களை அவர் மகிழ்ச்சியுடன் கேட்டறிந்தார்.
டொங் இனத்தின் கிராண்ட் பாடல், இசை அமைப்பாளர்கள் மற்றும் இசைக்கருவிகள் இல்லாத நிலைமையில், கூட்டாக பலர் இணைந்து பாடும் நாட்டுப்புறக் கலை ஆகும். இது, வாய்மொழி மூலம் தலைமுறை தலைமுறை தொடர்ந்து வருகின்றது.
புறவைகள் மற்றும் பூச்சிகள் கீச்சிடுதல், இயற்கை ஒலி, புராணக்கதை, ஒழுக்க நெறி, காதல் முதலிய உள்ளட்டக்கங்களை இத்தகைய பாடல்கள் கொண்டுள்ளன.
2009ஆம் ஆண்டில், மனிதகுலத்தின் பொருள் சாரா கலாச்சார மரபுச் செல்வங்களுக்கான யுனெஸ்கோவின் பட்டியலில் டொங் இன கிராண்ட் பாடல் கலை சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது.