சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஆபிரிக்க ஒன்றிய ஆணையத்தின் தலைவர் யூசோஃபுடன் இணைந்து ஜனவரி 8ஆம் நாள், 9ஆவது சீன-ஆபிரிக்க ஒன்றிய நெடுநோக்கு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
இவ்வாண்டு, சீன-ஆபிரிக்க தூதாண்மையுறவு துவங்கிய 70ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 36 ஆண்டுகளில், ஒவ்வொராண்டும் சீனா முதலாவதாக தூதாண்மை பயணம், ஆபிரிக்க கண்டத்தில் மேற்கொண்டது என்றார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
தேசிய இன சுதந்திரத்திலும் விடுதலை இலட்சியத்திலும் கூட்டாக பாடுபட்ட போக்கில் இருதரப்புகளின் நட்புறவு உருவாக்கப்பட்டது. சர்வதேச மற்றும் பிரதேச நிலைமை எப்படி மாறினாலும், உதவி தேவைப்படும் போது சீனா முதலில் உதவி அளிக்கும். சீனாவும் ஆபிரிக்காவும் நவீனமயமாக்கத்தை நனவாக்கும் போக்கு, உலக சமநிலை ஒத்துழைப்புகளையும் நிதானத்தையும் முன்னெடுக்கும் என்றார்.
