தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜயின் கடைசி படமான ஜனநாயகன் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தெறி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தெறி திரைப்படம், விஜயின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
இதில் விஜய் ஜோசப் குருவில்லா மற்றும் விஜய் குமார் என இரு வேறு பரிமாணங்களில் நடித்து அசத்தியிருப்பார்.
மீண்டும் திரைக்கு வருகிறது நடிகர் விஜயின் பிளாக்பஸ்டர் ஹிட் தெறி
