ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து புவனேஸ்வர் நோக்கிப் புறப்பட்ட இந்தியாஒன் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று சனிக்கிழமை (ஜனவரி 10) மதியம் விபத்துக்குள்ளானது.
ஒன்பது இருக்கைகள் கொண்ட இந்த விமானம், ரூர்கேலாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்குவதற்கு முன்னதாக விபத்தில் சிக்கியது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின் போது விமானத்தில் ஒரு விமானி மற்றும் ஆறு பயணிகள் என மொத்தம் ஏழு பேர் இருந்தனர்.
ரூர்கேலாவிலிருந்து சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் தொலைவில் விமானம் விழுந்து நொறுங்கியது.
விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இடிபாடுகளில் சிக்கியிருந்த ஏழு பேரையும் மீட்டனர்.
ஒடிசாவில் பரபரப்பு: ரூர்கேலா அருகே சிறிய ரக விமானம் விபத்து
