அண்மையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், சீன வேளாண்பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அனுப்பிய கடித்த்தில்,
இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் 120ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அவர்களுக்கு
வாழ்த்து தெரிவித்தார்.
இதில் அவர் கூறுகையில், புதிய யுகத்தில், தாங்கள் அனைவரும்
நல்ல பாரம்பரியத்தைப் பரவல் செய்து, கல்வி சீர்திருத்தத்தை ஆழமாக்கி, வேளாண்மை
பற்றிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்கத்தை வலுப்படுத்தி, வேளாண்
துறையில் ஆர்வம் கொண்ட மேலதிக திறமையாளர்களை வளர்த்து, சீன நவீனமயமாக்கத்தை
முன்னேற்றுவதற்குப் புதிய பங்காற்ற வேண்டும் என்று கூறினார்.