ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் நாசா இணைந்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர் விண்கலம், சூரிய ஆய்வில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சூரியனின் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அதீத செயல்பாடுகள் கொண்ட ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தொடர்ந்து 94 நாட்களுக்குக் கண்காணித்து இந்த விண்கலம் தரவுகளைச் சேகரித்துள்ளது.
சூரிய இயற்பியல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியை இவ்வளவு நீண்ட காலம் உன்னிப்பாகக் கவனிப்பது இதுவே முதல் முறையாகும்.
பொதுவாகச் சூரியன் தனது அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால், அதன் ஒரு குறிப்பிட்ட பகுதியை விண்கலங்கள் நீண்ட நேரம் பார்ப்பது கடினம்.
ஆனால், சோலார் ஆர்பிட்டர் சூரியனைச் சுற்றி வரும் வேகம், சூரியன் சுழலும் வேகத்தோடு ஒத்துப்போகும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
சூரியனின் அதீத செயல்பாடுகள் கொண்ட பகுதியை 94 நாட்கள் கண்காணித்து சாதனை
